Latest

அட்சய பாத்திரம் உருவான விதம் - சுவாரசியமான தகவல்

பல யுகங்களுக்கு முன்னால் காசியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. உண்ண உணவும் பருக நீரும் இல்லாமல் மக்கள் மிகவும் அவதியுற்றனர். அதைக் கண்டு சகிக்க முடியாத மலைமகள் அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள். தனக்கென்று ஒரு மாளிகையை ஏற்படுத்திக்கொண்டு பரிவார தேவதைகளின் உதவியோடு மக்களின் பசிப்பிணி தீர்த்தாள். யார் எப்போது வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் உணவு வழங்கிக்கொண்டே இருந்தாள்.

ஒரு நிலையில் அன்னையும் அவளது பரிவாரங்களும் களைத்துப்போய்விட்டனர். அவர்களுக்கு உதவவும் அன்னபூரணியின் பெருமையை உலகறியச் செய்யவும் திருவுளம் கொண்டார் எம்பெருமான் ஈசன். பிட்சாடனர் வேடம் பூண்டு மனைவின் மாளிகைக்குப் போய் தன் பசியைத் தீர்க்கும்படி வேண்டினார். அன்னையும் நிறைய அன்னம் காய்கறிகள் பழங்கள் என உணவிட்டுக்கொண்டே இருக்க அவரும் அனைத்தையும் உண்டுகொண்டே இருந்தார்.




மாளிகையில் இருந்த அரிசி பருப்பு காய்கறி முதலிய பொருட்கள் அனைத்தும் தீரும் நிலை என்ன செய்வாள் அன்னை/ உடனே காசியில் பிந்து மாதவன் என்ற பெயரில் சேவை சாதிக்கும் தன் அண்ணனாம் திருமாலை நினைத்து வழி கேட்டாள். தங்கையின் துயர் தீர்க்க தயாபரன் தானும் ஒரு பிச்சாண்டி போல உருக்கொண்டு மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்.



வந்தவரை வரவேற்று அன்னம் படைத்தாள் அன்னபூரணி. அவற்றை அந்த பாத்திரத்தில் இட்ட மகாவிஷ்ணுஅட்சயஎன்ற வார்த்தையைக் கூறி அப்பாத்திரத்தைத் தொட்டார் அன்றுமுதல் அதிலிருந்து குறைவின்றி பலவகையான உணவுப்பொருட்கள் தோன்றின. முதல் முதல் அட்சய பாத்திரம் தோன்றிய நாள் அட்சய திருதியை. தன்னால்தான் பிட்சாடனாக வந்த சிவனின் பசியையும் தீர்த்தது அட்சய பாத்திரம். உடனே தன் சுயரூபத்தில் தோன்றி அன்னபூரணியின் பணி தடையின்றி நடக்கவும் அவள் புகழ் திக்கெட்டும் பரவவும் வரம் அளித்தார் ஈசன்.



மகாவிஷ்ணுவும் அப்பாத்திரத்தை தங்கையின் கையில் கொடுத்துஉமா இதுதான் அட்சய பாத்திரம் இதிலிருந்து வரும் பொருட்கள் என்றுமே குறையாது. இதைக் கொண்டு நீ உன் பணியைச் செவ்வனே நிறைவேற்றுவாயாக இதன் தேவை தீர்ந்தபின் இப்பாத்திரம் தானே வைகுண்டம் வந்து சேர்ந்துவிடும்என்று கூறி மறைந்தார். அதன் பிறகு பஞ்சம் தீரும் வரை அப்பாத்திரத்தைக் கொண்டு அன்னை அன்னபூரணி மக்களின் துயர் தீர்த்தாள். பஞ்சம் தீர்ந்து அன்னபூரணி விசாலாட்சியாக மறியதும் அட்சயப் பாத்திரம் மகாலட்சுமியைச் சென்று சேர்ந்து விட்டது.

புராணங்களை ஒட்டியே இன்றும் ஸ்ரீராம நவமி, புது வருடப் பிறப்பு, அட்சய திரிதியை போன்ற புண்ணிய தினங்களில் பானகம், நீர் மோர் அளிப்பது நடந்து வருகிறது.

No comments