Latest

மகாகவி பாரதியார் பொன்மொழிகள் - Bharathiyar Quotes Tamil

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்படவேண்டும்; கனவு மெய்ப்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்; கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்; மண் பயனுற வேண்டும். வானமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்! 

No comments