Latest

ஆதார் அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் என்பது இந்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். ஒவ்வொரு தனி நபருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு ஆதார் எண்ணும் தனித்துவமானது.

aadhar card

இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படும். பாலின மற்றும் வயது வேறுபாடு இன்றி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இந்த முறையை 5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமகனும் பதிவு செய்யலாம்.

இந்த பதிவு இலவசமானது. ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செய்துக்  கொண்டால் போதுமானது. இது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். வங்கி சேவை , செல்பேசி இணைப்பு மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகளை பெற ஆதார் எண் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அரசு மற்றும் தனியார் தகவல் களத்தில் உள்ள பெருமளவிலான இரட்டை மற்றும் போலி அடையாளங்களை அகற்றுவதற்கு ஏற்ற தனித்துவமும் , வலிமையையும் ஆதார் கார்டு கொண்டுள்ளது.  
  
ஆதார் அட்டை பெறுவது எப்படி?

ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பித்து நீங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். 



ஆதார் அட்டை பெற அடையாள அட்டை, இருப்பிடச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு உட்பட 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

சான்றுகள் இல்லையென்றால்

ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய ஒப்பம் அடையாளச் சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும். 

எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய ஒப்பம் இருப்பிடச் சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும்.



பதிவு செய்யும் முறை

பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும், அவை சரியாக இருந்தால் ஆதார் எண் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.

ஆன்லைனில் பதிவு செய்ய http://www.uidaadharcard.in/apply-aadhar-card-online/



No comments