வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று, தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. இதுவே தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்று.
18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொருவரும் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது கட்டாயமான ஒன்று. வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? இதோ அதற்கான பதில்..
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்
ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையுமெனில், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு இப்போது விண்ணப்பிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்தவேண்டும். படிவம் - 6 உடன், ஒரு வண்ணப் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை, 18 வயது பூர்த்தி அடைந்தத்தற்கான ஏதேனும் ஒரு சான்று இணைக்க வேண்டும்.
பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்
வேறு தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம் அல்லது நீக்க வேண்டிய பெயர் ஏதேனும் இருந்தால் இதற்காக, படிவம்-7 ஐ பயன்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்
உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா. - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தவறான பதிவின் திருத்தத்திற்கு படிவம்-8 ஐ பயன்படுத்துங்கள். அடையாளச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.
பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.
அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://eci-citizenservices.nic.in/default.aspx இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலை அறிய
http://www.elections.tn.gov.in/contacts/ இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்புஎண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் http://www.elections.tn.gov.in/eroll/ இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in/ இத்தளத்திற்குச் செல்லவும்.

No comments