Latest

தன்னை இகழ்ந்து பிறரை புகழும் குணம் - தன்னம்பிக்கை கதை

ஒருநாள் காமராஜ் அவர்கள், சட்டமன்றத்தக்கு செல்லும்போது மேல்தளத்துக்கு செல்ல மின்தூக்கியில் (லிப்ட்)சென்றார். அப்போது கண்ணீருடன் மனுவை கொடுத்தார் லிப்ட்டில் பணிபுரிபவர்.வாங்கி சட்டைபையில் வைத்துக்கொண்டு என்ன..என்று கேட்டார்.


அதற்கு அவர்,ஐயா தொழில்துறையிலிருந்து அரசானை வந்திருக்கிறது, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே.. பணியில் இருப்பார்களாம்…, கவலையோடு சொன்னவரை ,நான் பார்க்கிறேன், என்று தட்டிகொடுத்துவிட்டு, சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் கர்ஜித்தார்.
ஏழையின் வயிற்றில் அடிப்போதுபோல் அரசானை பிறப்பித்தது யார்,பொத்தானை அழுத்தினால் மேல போவதற்கும்,பொத்தானை அழுத்தினால் கீழே வருவதற்கும்,பத்தாவது வரை படிக்கனுமா, அப்படியென்றால் நான் எட்டாம்வகுப்புவரை தானேன படிச்சிருக்கேன்…எனக்கு அந்த லிப்ட துடைக்கிற வேலைகூட கிடைக்காதே என்று குரல் உயர்த்தியதும் வாயடைத்து போனார்கள் அதிகாரிகள்.

தன்னை இகழ்ந்து பிறரை புகழும் குணம்,உயர்ந்த மனிதர்களிடம் மட்டுமே காணப்படும்.

Post Comment